இந்திய தொலைக்காட்சியில் ஒரு நாளைக்கு ரூ.3,00,000 சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா..?

ரூபாலி கங்குலி அதிக சம்பளம் வாங்கும் இந்திய தொலைக்காட்சி நடிகையாக உள்ளார். ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என கூறப்படுகிறது.
நடிகை ரூபாலி கங்குலி ‘அனுபமா’ (Anupamaa) என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவருக்கு வயது 44. இவர் தற்போது இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறியுள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. ரூபாலி மூத்த நடிகை என்பதால் ஒரு நாளைக்கு ரூ. 1.5 லட்சம் சம்பளத்தில் இந்த சீரியலில் நடிக்க தொடங்கினார்.
இருப்பினும், இப்போது நடிகை ஒரு நாளைக்கு ரூ.3 லட்சம் வாங்குகிறார் என்று கூறப்படுகிறது. இந்த ‘அனுபமா’ சீரியல் இந்தியாவில் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பெரும் புகழ் பெற்றது. ஒரு வருடத்திற்கும் மேலாக டிஆர்பி குறையாமல் நிரூபித்த ஒரே சீரியல் ‘அனுபமா’ தான். தற்போது அனுபமா இந்திய தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.
இந்நிலையில், இந்திய தொலைக்காட்சியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற சாதனையை நடிகை ரூபாலி கங்குலி படைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன் அவரது சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. ரூபாலி கங்குலி இதற்கு முன் இந்தி பிக் பாஸ் 1ல் கலந்து கொண்டார்.