வாலன்டைன் என்றால் யார் தெரியுமா….?

Default Image

வாலண்டைன் என்பவர் ஒரு கிருஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்  என்பதற்காக ரோமானிய பேரரசரான கிளாடியஸால் சிறையில் அடைத்து விசாரணை செய்யப்பட்டார்.

வாலண்டைனின் விவாதத்தால் ஈர்க்கப்பட்ட கிளாடியஸ் அவரது உயிரை காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். வாலண்டைன் இதனை மறுத்துள்ளார்.

Image result for வாலண்டைன்

இதற்கிடையில், இளைஞர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் மீறினால் இருட்டறையில் அடைக்கப்பட்டு, தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் ரோமானிய பேரரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்தது.

Image result for திருமணங்கள்

இருப்பினும் மதகுருவான வாலண்டைன் இளைஞர்களுக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்தார். இதனை அறிந்த கிளாடியஸ் அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றும்படி கட்டளையிட்டார்.

மரணதண்டனை நிறைவேற்றபடுவதற்கு சில நாட்கள் இருக்கும் போது, வாலண்டைனுக்கும், சிறை துறை அதிகாரியின் மகள் அஸ்டோரியாஸுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து வாலண்டைனை விடுவிக்குமாறு தனது அப்பாவிடம் வேண்டியுள்ளார்.

Related image

இருவருக்கும் காதல் ஏற்பட்டதை அறிந்த சிறை துறை தலைவன் தனது மகளை வீட்டில் சிறை வைத்தார். அனைத்து சிறை பாதுகாப்பையும் மீறி, தனது காதலிக்கு வாழ்த்து அட்டை ஒன்றை எழுதியுள்ளார். அந்த வாழ்த்து அட்டையை படிக்கும் போது, வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

அவர் இறந்த நாளான பிப்.14-ம் நாள் 270-வது வருடம் முதல் இந்த நாள் காதலர் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்