துக்ளக் தர்பார் படத்தில் மக்கள் செல்வன் தங்கையாக நடிப்பது யார் தெரியுமா..?
துக்ளக் தர்பார் படத்தில் மக்கள் செல்வன் தங்கையாக நடிகை மஞ்சிமா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தற்பொழுது இயக்குனர் டெல்லி பிரசாத் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் துக்ளக் தர்பார்.இந்தப் படத்தில் அதிதிராவ் ஹைத்ரி, மஞ்சிமா மோகன், பார்த்திபன், காயத்ரி ஷங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள இந்த படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் குமார் தயாரிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு தங்கையாக நடிப்பது யார் என்று தகவல் தெரிந்துள்ளது, ஆம் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு தங்கையாக நடித்த மஞ்சிமா இந்த துக்ளக் தர்பார். படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.