முதலில் இளையதளபதி என்ற பட்டம் கிடைத்தது யாருக்கு தெரியுமா.!
1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் விஜய் என்பது அனைவரும் அறிந்ததே. விஜய் நடித்த ரசிகன் என்ற திரைப்படத்திலிருந்து தான் இளையதளபதி என்ற பட்டம் இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் 2017ல் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் திரைப்படம் மூலம் ரசிகர்களால் தளபதி என்று அழைக்கப்பட்டார்.
ஆனால் முதலில் இளையதளபதி என்ற பட்டம் நடிகர் சரவணனுக்கு 1993ல் வெளியான நல்லதே நடக்கும் என்ற படத்தின் மூலம் முதலில் வழங்கப்பட்டது. ஆம் இந்த படத்தில் நடிகர் சரவணனை இளையதளபதி சரவணன் என்று தான் டைட்டில் போட்டார்களாம். மேலும் தற்போது விஷால் அவர்களை தான் புரட்சி தளபதி என்று செல்லமாக அழைப்பார்கள். ஆனால் 1996ல் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்று திரைப்படத்தில் அவரது பெயரை புரட்சி தளபதி அருண்விஜய் என்ற டைட்டிலில் தான் வெளியானதாக கூறப்படுகிறது.
Before Vijay and Vishal became Ilaya Thalapathy and Puratchi Thalapathy, the titles were used by #Saravanan (Nallathe Nadakkum, 1993) and #ArunVijay (Priyam, 1996) respectively.
[Credits – Bhuvi Shakti Mohan] pic.twitter.com/YTe4rdcusq
— Christopher Kanagaraj (@Chrissuccess) May 27, 2020