யார் புருஷனுக்கு யார் முத்தம் கொடுக்கிறது – பீட்டர் பால் மனைவி ஆவேசம்!

Default Image

யாருடைய கணவருக்கு யார் முத்தம் தருவது என பீட்டர் பாலின் முதல் மனைவி வணிதாவையும் பீட்டரையும் திட்டியுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்புடன் பேசப்படக்கூடிய ஒரு செய்தி என்றால் அது வனிதாவின் திருமணம் தான். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெறாத பீட்டர் பால் என்பவர் வனிதாவுடன் செய்துகொண்ட திருமணத்துக்கு முதல் மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, தனது கணவர் தனக்கு தேவை எனவும் தனது பிள்ளைகளுக்கு அப்பா தேவை எனவும் வாதாடி வருகிறார். அவரது முதல் மனைவி க்கு ஆதரவாக சமூக ஆர்வலர்களும் பல நெட்டிசன்கள் பேசிவருகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசாமல் இருந்த பீட்டர் பாலின் மனைவி எலிசபெத் தற்போது மீண்டும் சமூகவலைதளத்தில் பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் நான் நீதிபதிகளையும் காவலர்களையும் நம்பி இருந்தேன் ஆனால் அவர்களை நம்புவது தவறு என்று இப்போது தான் தெரிகிறது. முதலிலேயே அவளது வீட்டிற்கு சென்று இருவரையும் அடித்து இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் பீட்டர் பால் ஏன் நீ ஒளிந்து கொண்டு இருக்கிறாய் சம்பந்தப்பட்ட நாங்களே வெளியிலிருந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது, நீ தான் இதில் முக்கியமான புள்ளி நீயே ஏன் ஒளிந்து வனிதாவை முன்னால் விட்டு பேச வைத்துக் கொண்டிருக்கிறாய்?

சமூக வலைதளங்களில் முகம் காட்ட கூச்சப்படும் நீ சமூக வலைதளங்களில் முத்தம் கொடுக்கலாமா? யாருடைய புருஷனுக்கு யார் முத்தம் கொடுப்பது? கொஞ்சமும் அறிவில்லாத பிறவிகளாக இருக்கிறார்கள் என்று வனிதாவையும் பீட்டர் பாலையும் எலிசபெத் திட்டி தீர்த்துள்ளார். மேலும் தற்பொழுது நீதித்துறை அனைத்தும் மூடப்பட்டு இருக்க கூடிய நிலையில் எந்த செயலை நாங்கள் செய்ய முடியவில்லை. விரைவில் இதற்கு ஒரு முடிவு கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார், மேலும், தனக்கு ஆதரவு தரும் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்