அடி தூள்! யாருய்யா இந்த சுருளி.? அதிரடியான சண்டை காட்சிகளுடன் வெளியான ‘ஜகமே தந்திரம்’ டீசர்.!

தனுஷின் ஜகமே தந்திரம் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஓடிடியில் நேரடியாக வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.இது குறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ,அனைவரையும் போலவே ஜகமே தந்திரமின் திரையரங்கு வெளியீட்டையே நானும் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனை தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் ரிலீஸாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது .
இந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜகமே தந்திரம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.சுருளி என்பது யார் என்ற கேள்வியுடன் தொடங்கி அசத்தலான சண்டை காட்சிகளுடன் வெளியாகிய ஜகமே தந்திரம் டீசரை தொடர்ந்து படமானது நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்போது இந்த டீசரை தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக்கி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…
April 1, 2025
“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!
April 1, 2025