அருண்விஜய்யின் ‘பாக்ஸர்’ படத்தின் வில்லன் யார் தெரியுமா.! கசிந்த கதை.!
அருண் விஜய் நடிக்க உள்ள பாக்ஸர் என்னும் திரைப்படத்தின் வில்லனாக தயாரிப்பாளரான மதியழகன் நடிப்பதாக கூறப்படுகிறது.
அருண் விஜய், கடைசியாக கார்த்திக் நரேனின் மாபியா படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் நடிக்க இருப்பதோடு வா டீல் என்ற படமும், அக்னி சிறகுகள், சினம், ஜிந்தாபாத் ஆகிய படங்களில் கமிட்டாகியுள்ளார். இதற்கு முன்பெல்லாம் பாக்ஸர் என்னும் திரைப்படத்தில் கமிட்டாகி அதன் பூஜையும் நடைப்பெற்றது. ஆனால் இதன் படப்பிடிப்பு திட்டமிட்டப்படி தொடங்கப்பட வில்லை. அறிமுக இயக்குனரான விவேக் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் பேனரின் கீழ் மதியழகன் தயாரிக்கிறார். டி. இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்காக அருண் விஜய் வெளிநாடுகளில் சென்று தற்காப்பு கலைகளை கற்றுக் கொண்டார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்த அனுராக் கஷ்யப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் அவை அனைத்தும் தோல்வியை தழுவியதாக தயாரிப்பாளரான மதியழகன் பேட்டியில் குறிப்பிட்டார். மூன்று வித்தியாசமான லுக்கில் பாக்ஸராக நடிக்கும் அருண்விஜய்க்கு தற்போது வில்லனாக நடிப்பது யார் என்ற செய்தியை தயாரிப்பாளரே வெளிப்படுத்தியுள்ளார். ஆம், பாக்ஸர் படத்தின் தயாரிப்பாளர் தான் அருண்விஜய்க்கு வில்லனாக நடிப்பதாக கூறியுள்ளார். அருண்விஜய்க்கு மேனேஜராக நடித்துள்ளதாக வும், தனது பேச்சை கேட்காமல் அவர் முடிவெடுக்கும் பட்சத்தில் அவருக்கு தான் வில்லனாக மாறுவதாகவும் கதையை போட்டுடைத்துள்ளார். மேலும் மதியழகன் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்து வரவது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பை இன்று மாலை 5மணிக்கு ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணி வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வில்லனாக நடிக்கும் தயாரிப்பாளர் மதியழகன் :