தளபதி-66 படத்தினை அட்லி இயக்க உள்ளதாக வெளியான தகவலை தொடர்ந்து அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் மறைமுகமாக ட்வீட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார் . விரைவில் படப்பிடிப்பை தொடங்கும் இந்த படத்தினை தொடர்ந்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தினை குறித்த தகவல்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.
அதில் தளபதியின் 66-வது படத்தினை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது.தற்போது வெளியான தகவலின்படி, தளபதியின் 66-வது படத்தினை லோகேஷ் கனகராஜ் அல்லது அட்லி இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . கூடுதலாக அட்லி இயக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும்,அதனை தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் இயக்குனர் அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தளபதி விஜய்யின் வீடியோ ஒன்றை பகிர்ந்து அதற்கு ஹார்ட் சிம்பலை கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் தளபதி 66 படத்தை இயக்குவதை மறைமுகமாக கூறுகிறாரே என்று கூறி வருகின்றனர்.விரைவில் தளபதியின் 66-வது படத்தினை இயக்குவது யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…