தலிபான்கள் தலைவர் முல்லா அப்துல் கனி,ஆப்கானின் புதிய அதிபராகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான தொடர் தாக்குதலில் தலிபான்கள் ஈடுபட்டு வந்தனர்.இதனையடுத்து,ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, ஆட்சி அதிகாரத்தையம் கைப்பற்றினார்கள்.
இதனையடுத்து,தலிபான்கள் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகவும் விரைவில் பணிக்கு திரும்புமாறும் அறிவுறுத்தினர்.இதற்கிடையில்,பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர். நகர பேருந்துகளில் ஏறுவதற்கு முயற்சிப்பது போல், விமானத்தில் ஏறுவதற்கு முயற்சித்தும்,விமானத்தில் இடம் கிடைக்காத நிலையில், விமான சக்கரத்தில் தொங்கியபடி பயணம் செய்தும்,அப்போது விமானம் உயரே பறந்த நிலையில், பிடிமானத்தை இழந்த 3 பேர் வானில் இருந்து கீழே குடியிருப்பு பகுதியில் விழும் வீடியோக்கள் வெளியாகி பேரதிர்ச்சியை உண்டாக்கியது.
மேலும்,ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டியுள்ளது.
இந்த நிலையில் தலிபான்கள் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவரான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதனை உறுதி செய்யும் விதமாக கத்தாரிலிருந்து ஆப்கானுக்கு,நேற்று அவர் வருகை புரிந்துள்ளார்.சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் வருகை தந்திருக்கிறார்.ஏனெனில்,தலிபான்களின் அரசியல் தலைவரான அப்துல் கானி பரதர் 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.மூன்று வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் வேண்டுகோளின் பேரில் அவர் பாகிஸ்தான் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார் மற்றும் கத்தார் நாட்டிற்கு மாற்றப்பட்டார்.
யார் இவர்?:
ஆப்கன் உருஸ்கன் மாகாணத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்த முல்லா அப்துல் கனி பரதர். ஆப்கனில் சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கன் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர்.சோவியத் யூனியன் வெளியேற்றத்துக்குப் பிறகு, 1994 ஆம் ஆண்டு முகமத் ஒமருடன் இணைந்து தலிபான் இயக்கத்தை ஆரம்பித்தவர்.மேலும்,இவர் ஹெராட் மற்றும் நிம்ரூஸ் மாகாணங்களின் ஆளுநராக இருந்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை ஆவணம் இவரை முன்னாள் துணை ராணுவத் தளபதி மற்றும் காபூலின் மத்திய இராணுவப் படைத் தளபதி என்று பட்டியலிடுகிறது.அதே சமயம் இவர் தலிபானின் பாதுகாப்பு துணை அமைச்சர் என்று இன்டர்போல் கூறுகிறது.கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்ற அமெரிக்க அரசுடனான அமைதி பேச்சு வார்த்தையில் இவர் முதன்மை பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…