பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது யார்..??

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை நடிகர் நகுல் தொகுத்து வழங்க பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய நிகழ்ச்சிகளில் பிரபலமான ஷோ பிக்பாஸ் . கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா மற்றும் மூன்றாவது சீசனில் முகேன் ராவ் டைட்டிலை வென்றனர் .அதன் பின் நான்காவது சீசன் சமீபத்தில் முடிவடைந்ததும் ,அதில் ஆரி அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 5-வது சீசன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5-ஆனது ஜூன் மாதம் தொடங்க உள்ளதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் பிஸியாக உள்ளதால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்தூர் பகுதியில் வெற்றிபெற்றுவிட்டால் கண்டிப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் 5வது சீசனை அவரால் தொகுத்து வழங்க முடியாது.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசனை யார் தொகுத்து வழங்குவார் என்ற கேள்வி ரசிகர்களுக்கு மத்தியில் எழும்பியநிலையில், சிம்பு தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அதனை தொடர்ந்து, தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியை நடிகர் நகுல் தொகுத்து வழங்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025