பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்களில் ஷிவானி ஜெயித்தால் சந்தோஷப்படுவேன் என்று சுரேஷ் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது . அதில் முதல் வாரத்தில் ரேகா வெளியேற வைல்ட் கார்ட் என்ட்ரியாக வீட்டிற்குள் நுழைந்தார். அதனையடுத்து இரண்டாம் வாரத்தில் வேல் முருகன் வெளியேற சுசித்ரா செக்கன்ட் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார் . இதனையடுத்து கடந்த வாரம் சிறப்பாக விளையாடிய சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் . இது பலருக்கும் கடும் அதிர்ச்சியாகவே இருந்தது .
எல்லோருக்கும் கடும் போட்டியாளராக இருந்த சுரேஷ் சக்கரவர்த்தி அடிக்கடி தந்திரங்களை பயன்படுத்தியும், கொளுத்தி போட்டும் போட்டியை சுவாரசியமாக கொண்டு சென்றார் . அவர் வெளியேறியதும் பலருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் அவர் முதலில் அளித்திருக்கும் பேட்டியில் பிக்பாஸ் போட்டியாளர்களை குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை கூறினார் .
அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் போட்டியாளர்களில் யார் ஜெயித்தால் நீங்கள் சந்தோஷப்படுவீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது . அப்போது அந்த வீட்டில் எனக்கு மிகவும் பிடித்தது ஷிவானியை மட்டும் தான் என்றும் , அவர் ஜெயித்தால் சந்தோஷப்படுவேன் என்றும் கூறியுள்ளார் . மேலும் அவர் பாலாஜியை காதலிக்கவில்லை என்றும் , அவர் எந்த தவறும் செய்யவில்லை, ஷிவானி பாவம் என்று புகழ்ந்து கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…
கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…
நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 3 டி0 போட்டிகள், 3…
ராஜஸ்தான் : ஜெய்ப்பூர் - அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் இன்று வெள்ளிக்கிழமை காலை டிரக் மற்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
சென்னை : கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் தமிழ்நாட்டின் எல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மருத்துவ கழிவு குப்பைகள் கொட்டப்பட்டுள்ள நிலையில்,…