கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளித்து வந்த நிலையில், ஆதரவு அளித்த இந்தியாவுக்கு நன்றி என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், அதனை கட்டுப்படுத்த உலகளவில் சில நாடுகளில் கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களுக்கு தடுப்பூசி மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் தடுப்பூசியினை போட்டுக்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தியா, மற்ற நாடுகளான பிரேசில், சவூதி அரேபியா, தென்னாபிரிக்கா, மியான்மர், பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வருகிறது. இது உலகளவில் பேசப்பட்டு வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் ட்விட்டர் பதிவில், உலகளவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் இந்தியா தொடர்ந்து ஆதரவு அளிப்பதற்கு அந்நாட்டிற்கும், அந்நாட்டின் பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும், இணைந்து செயல்படுதல் மற்றும் தகவல்களை பரிமாறிக் கொள்வதன் மூலமாக கொரோனா பரவலை தடுத்து, மனித உயிர்களை காப்பாற்றமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…