உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், செய்தியளர்களை சந்தித்து பேசினார். அப்போது அமெரிக்கா அதிபர் ட்ரம்புக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, உலக சுகாதார அமைப்பு எந்த நாட்டுக்கும் ஆதரவாக செயல்படவில்லை என்றும் கொரோனா வைரஸை வைத்து அரசியல் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் டிரம்ப்-க்கு பதிலடி கொடுத்துள்ளார். நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள் என் கூறினார்.
மேலும் இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டு என்றும் பலி எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என தெரிவித்தார். இதனிடையே சமீபத்தில் அதிபர் ட்ரம்ப், உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார். கொரோனா குறித்த போதிய முன்னெச்சரிக்கையை வழங்கவில்லை எனவும் அதனால் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப் போவதாக அறிவித்தார். இந்நிலையில், ட்ரம்பின் குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த உலக சுகாதார அமைப்பு, அமெரிக்கா தொடர்ந்து நிதியை அளிக்கும் என நம்புவதாக இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…