யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள்? விவசாயிகளுக்கு ஆதரவாக சித்தார்த்!
விவசாயிகளின் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என டுவிட்டரில் பதிவு செய்யும் பிரபலங்களுக்கு, சித்தார்த் யார் சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களாக டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள விவசாயிகள் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக வெளிநாட்டில் உள்ள பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு வெளியுறவு துறை சார்பில் கடுமையான கண்டனமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சில கிரிக்கெட் வீரர்கள் தாங்கள் உள்நாட்டு பிரச்சினைகளை பார்த்துக் கொள்வதாகவும், வெளிநாட்டவர்கள் தலையிட வேண்டாம் என்பது போலும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதனையடுத்து தற்போது சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் உங்களது கதாநாயகர்களை கவனமாக தேர்ந்தெடுங்கள் எனவும், கல்வி, நேர்மை, சக மனிதர்கள் மீதான அன்பு, கொஞ்சம் முதுகெலும்பு ஆகியவை இருந்திருந்தால் இந்த நாளை காப்பாற்றி இருக்கலாம் எனவும், யாரோ ஒருவர் சொல்லிக் கொடுப்பதை ஒருமித்த குரலில் கூறுவதுதான் பிரச்சாரம், அப்படி யார் சொல்லிக் கொடுத்ததை நீங்கள் கூறுகிறீர்கள் என சித்தார்த் பிரபலங்களுக்கு கேள்வி எழுப்பி, விவசாயிகளுக்கு ஆதரவாக பதிவுகளை வெளியிட்டு உள்ளார். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தால் ஏற்படக்கூடிய மனித உரிமை மீறல்கள் ஒருபோதும் உள்நாட்டு விஷயமாக இருக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அவரின் பதிவுகள்,
Choose your heroes wisely or watch them fall from grace. Education, empathy, honesty and a little spine could have saved the day. Alas.
— Siddharth (@Actor_Siddharth) February 4, 2021
When powerful people who never take a stand, all suddenly sing the same tune in an orchestrated effort and just tow the line they are told to like pawns, that’s what propaganda is all about. Know your #propaganda. #farmersrprotest
— Siddharth (@Actor_Siddharth) February 4, 2021
Human rights violations albeit by an elected government must be seen in the same vein as domestic violence or child abuse, and hence, can never be an internal matter.#FarmersProtest
— Siddharth (@Actor_Siddharth) February 4, 2021