அமேசான் பங்குகளை உயர்த்தியதன் விளைவாக ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததைவிட 64 பில்லியன் டாலர் அதிகரித்து,மொத்தம் 177 பில்லியன் டாலர் உள்ள நிலையில் தொடர்ந்து நான்காவது முறையாக உலகின் பணக்காரர் பட்டியலில் ஜெஃப் பெசோஸ் முதலிடத்தில் உள்ளார்.
டெஸ்லா பங்குகள் 705% அதிகமானதால்,டாலர் அடிப்படையில் மிகப் பெரிய லாபம் ஈட்டிய எலோன் மஸ்க் 151 பில்லியன் டாலர் செல்வத்துடன் 2 வது இடத்தைப் பிடித்தார்.
பிரெஞ்சு சொகுசு பொருட்களின் அதிபர் மற்றும் LVMH தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் ,150 பில்லியன் டாலர் செல்வத்துடன் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்.இதற்கு காரணம் அழகுசாதனப் பொருட்கள் உள்ளிட்ட பிராண்டுகளில் LVMH-இன் பங்குகள் 86% உயர்ந்ததே ஆகும்.எனவே அவரது சொத்து மதிப்பு 76 பில்லியன் டாலரிலிருந்து 150 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
மைக்ரோசாப்ட்,கனேடிய தேசிய ரயில்வே மற்றும் டிராக்டர் தயாரிக்கும் டீரெ & கம்பெனி ஆகியவற்றின் உரிமையாளரான பில் கேட்ஸ் 124 பில்லியன் டாலருடன் நான்காவது இடத்தில் உள்ளார்.
ஐந்தாவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் 97 பில்லியன் டாலர்களுடன் உள்ளார். அவர் ஒரு வருடத்திற்கு முன்பு 42.3 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டிருந்தார்.ஆனால் தற்போது பேஸ்புக்கின் பங்குகள் 80% உயர்ந்துள்ளன, ஏனெனில் உலகெங்கிலும் உள்ள மக்கள் தொடர்பில் இருக்க அதன் சமூக ஊடக தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
96 பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்று உலகின் ஆறாவது பணக்காரராக வாரன் பபெட் உள்ளார்.உலகின் சிறந்த முதலீட்டாலர்களுள் இவரும் ஒருவர்.
ஏழாவது இடத்தில் ஹவாயில் உள்ள சாப்ட்வேர் நிறுவனரான லார்ரி எல்லிசன் உள்ளார்.இவரின் சொத்து மதிப்பு 93 பில்லியன் டாலர் ஆகும்.
அமெரிக்க கம்ப்யூட்டர் விஞ்ஞானி மற்றும் கூகுள் துணை நிறுவனரான லார்ரி பேஜ் 91.5 பில்லியன் டாலருடன் 8வது இடத்தைப் பிடித்துள்ளார்.
ஒன்பதாவது இடத்தில் கலிபோர்னியாவில் உள்ள கூகுளின் மற்றொரு துணை நிறுவனரான செர்கே ப்ரின் இருக்கிறார்.இவர் கூகுள் மூலம் 89 பில்லியன் டாலர் சொத்து மதிப்பைக் கொண்டுள்ளார்.
இந்தியாவை சேர்ந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான முகேஷ் அம்பானி 84.5 பில்லியன் டாலர் மதிப்புடன் 10வது இடத்தில் உள்ளார்.
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…
மும்பை : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், டெல்லி அணியும் மோதியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை…