உலகின் 10 பணக்காரர்கள் யார்? 8வது இடத்தை பிடித்த முகேஷ் அம்பானி!
227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார்.
உலகளவில் முதல் 10 பணக்காரர்கள் யார் என்பதை குறித்து பிரபல ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் (Bloomberg’s Billionaires Index) வெளியிட்டுள்ளது. அதாவது, ப்ளூம்பெர்க்கின் பில்லியனர்கள் இன்டெக்ஸ் படி 227 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் உலகளவில் முதல் பணக்காரர் ஆவார் என்று தெரிவித்துள்ளது.
அவரைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் ($149 பில்லியன்), பெர்னார்ட் அர்னால்ட் ($138 பில்லியன்), பில்கேட்ஸ் ($124 பில்லியன்), வாரன் பஃபெட் ($114 பில்லியன்), லாரி பேஜ் ($106 பில்லியன்), செர்ஜி பிரின் ($102 பில்லியன்) ஆகியோர் உள்ளனர். மேலும் இவர்களை தொடர்ந்து இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி ($99.7 பில்லியன்) 8வது இடத்திலும், கௌதம் அதானி ($98.7 பில்லியன்) 9வது இடத்திலும் உள்ளனர். மேலும், ஸ்டீவ் பால்மர் ($96.8 பில்லியன்) 10வது இடத்தில் இருக்கின்றார்.
இதில், முகேஷ் அம்பானி பல வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருந்து தனது போட்டியாளரான கௌதம் அதானியை வீழ்த்தி, மீண்டும் பணக்கார இந்தியரானார். கடந்த சில மாதங்களில், அதானி குழும நிறுவனப் பங்குகள் பெருமளவில் உயர்ந்து, இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராக கௌதம் அதானி இருந்தார். தற்போது முகேஷ் அம்பானி மீண்டும் நம்பர்-1 இடத்துக்கு வந்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் மீள் எழுச்சியால் அம்பானி மீண்டும் முதலிடத்தைப் பெறுகிறார் – இது மார்ச் தொடக்கத்தில் இருந்து 25% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் இன்டெக்ஸ் படி, அம்பானியின் சொத்து மதிப்பு 99.7 பில்லியன் டாலராகவும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 98.7 பில்லியன் டாலராகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.