சீனாவின் சினோவாக் தடுப்பூசிக்கு WHO ஒப்புதல்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, சீனாவின் சினோவாக் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே, உலக சுகாதார அமைப்பு சீனாவின் சினோபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது உலக சுகாதார அமைப்பின் ஒப்புதலை பெற்ற சீனாவின் இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஆகும்.
இந்நிலையில், சினோவாக் தடுப்பூசியை சீனாவை தவிர்த்து, பிரேசில்,. சிலி, இந்தோனேசியா, மெக்சிகோ, தாய்லாந்து, துருக்கி ஆகிய நாடுகள் பயன்படுத்துகிறது. பைசர், மாடர்னா ஜான்சன் அண்ட் ஜான்சன், அஸ்ட்ரா ஜெனகா ஆகிய தடுப்பூசிகளுக்கு, உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…