எஞ்சியுள்ள மூவரில் இன்று வெளியேறுவது யார் .?

பிக்பாஸ் நாமினேஷனில் சனம், ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் யார் வெளியேற உள்ளார் என்பதனை கமல் கூறுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது
நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில்,நாமினேஷனில் சனம் , ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ளனர் .வீட்டில் ஒரு எண்ணமும் நாட்டில் ஒரு எண்ணமும் இருக்க கூடும் என்ற கமல் நீங்க எவிக்ட் ஆனால் என்ன சொல்லுவீங்க என்று கேட்கிறார்.
அதற்கு சனம் மீண்டும் இருந்தால் நன்றாக தான் இருக்கும் என்றும்,போனாலும் திருப்தியுடன் செல்வேன்,இருந்தாலும் இதன் பின் நன்றாக விளையாடுவேன் என்றும் அனிதா கூறுகிறார்.மேலும் ஷிவானி இறுதியில் மக்களின் தீர்ப்பு என்பதால் ஏற்றுக் கொள்வேன் என்று கூறுகிறார்.அதன் பின் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேறுபவர் யார் என்பவரின் பெயரை உடைய எரிக்சன் கார்டை கமல் காண்பிக்க புரோமோ முடிவடைகிறது.இதோ அந்த வீடியோ
#BiggBossTamil இல் இன்று.. #Day63 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/ypPAtbUP2P
— Vijay Television (@vijaytelevision) December 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025