சென்னை டி நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ள தியாகராய நகரில் பெயருக்கு காரணமான சர்.பி.தியாகராய செட்டி நினைவு தினம் இன்று.
சென்னை கொருக்குப்பேட்டையில் வசித்துவந்த அய்யப்ப செட்டியார் மற்றும் வள்ளி அம்மாள் தம்பதியினருக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி பிறந்த மூன்றாவது மகன் தான் வெள்ளுடை வேந்தர் பி தியாகராய செட்டி. இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து 1876 ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். இவரது மனைவி பெயர் சிந்தாமணி. இவருக்கு ஒரு மகன் மற்றும் 7 மகள்கள் உள்ளனர். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும் நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவராக திகழ்ந்தவருமாகிய தியாகராயர் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் மிகப்பெரும் தொழில் அதிபராகவும் பெயர் பெற்றிருந்துள்ளார்.
இவர் பிராமணரல்லாத சாதியினரின் நலனுக்காக குரல் கொடுப்பதற்காக டி.எம்.நாயருடன் சேர்ந்து நீதிக்கட்சியை தொடங்கிய இவர் முதன்மறையாக 1920 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல் அமைச்சராகவும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் இவர் முதல்வர் பொறுப்பு ஏற்காமல் கட்சித் தலைவராக மட்டுமே நீடித்துள்ளார். எனவே,நீதிக் கட்சியின் தலைவராக அக்கட்சியின் உள்ள சுப்பராயலு ரெட்டியார், பனகல் அரசர் ஆகியோர் முதல்வராக இருந்த நிலையில் 1925ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23ஆம் தேதி தியாகராயர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில் இவரது நினைவாக தான் சென்னையில் அந்நேரத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதிக்கு தியாகராயநகர் நகர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதாவது தற்போது நாம் அழைக்கும் தி.நகர் இவரது பெயர் நினைவாகவே சூட்டப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் சர் பிட்டி தியாகராயர் அரங்கம் என்னும் பெயரிலும் அரசு விழாக்கள் நடத்தப்படும் அரங்கம் ஒன்று உள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…