வெள்ளை பெயிண்ட் அடிச்சா போதும்…., ஏசி தேவையில்லை…!

Default Image

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஏசிக்கு நிகரான அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள  பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனை கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர். இந்த வெண்மை நிற பெயிண்ட் கின்னஸ் உலக சாதனையும் படைத்துள்ளது. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வெண்மை நிற பெயிண்ட், சூரிய வெப்பத்திலிருந்து கட்டிடத்தை பாதுகாப்பது மட்டுமல்லாமல் குளிர்ச்சியையும் கொடுக்கும் என கூறப்படுகிறது.

இந்த பெயிண்ட் 98.1 சதவீதம் அளவுக்கு சூரிய கதிர் வீச்சை பிரதிபலிப்பதுடன், மிகக் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக் கொள்வதாகவும் கூறப்படுகிறது. இந்த பெயிண்டை நாம் ஒரு கட்டிடத்தில் அடிக்கும் பொழுது எந்த ஒரு ஆற்றலும் இல்லாமலேயே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் என கூறப்படுகிறது.

அதாவது ஆயிரம் சதுரஅடி கொண்ட மாடி பரப்பளவில் இந்த பெயிண்டை நாம் ஒரு கோட்டிங் அடித்தாலும், 10 கிலோவாட் மின் ஆற்றலை எடுத்துக் கொண்ட ஏசி மூலம் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ, அதே அளவு குளிர்ச்சி இந்த பெயிண்ட் அடிப்பதன் மூலமாகவும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்