சிலருக்கு வெற்றியானது எளிதில் கிடைத்து விடும். ஆனால், பலருக்கு வெற்றியானது கடுமையான முயற்சி செய்தால் தான் கிடைக்கும். சிலருக்கு அப்படி கடுமையாக உழைத்தாலும் கிடைப்பது மிகவும் கஷ்டமாக இருக்கும். அதனால் பெரும்பாலானோர் நமக்கு மட்டும் ஏன் கடவுள் இப்படி செய்கிறார் என நொந்து கொள்கின்றனர்.
ஒருவருக்கு வாழ்வில் தோல்வி ஏற்படவில்லை என்றால் அவர் கடவுளை நினைத்து கூட பார்க்க மாட்டார். அதனால் தான் வெற்றியும், தோல்வியும் மனிதனுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து தோல்வி ஒருவர் பெற்று வந்தால் அது அவரது தவறில்லை. கண்டிப்பாக வெற்றி அவரை தேடி வரும். தோல்வி என்பது தொடர் முயற்சிக்கு கிடைத்த வெற்றி. அந்த தோல்வியின் மூலம் நீங்கள் கற்று கொள்ளாமல் இருந்தால் தான் அது உங்களுக்கு உண்மையான தோல்வி.
தோல்வியை தவிர்த்துவிடலாம். ஆனால், கெட்ட நேரத்தை எவ்வாறு தவிர்ப்பது என்று இப்போது பார்க்கலாம். நமக்கு நல்ல நேரம் கூடிவந்து வெற்றியை கொடுக்க நமது ஜாதகத்தில் ராகு சிறப்பாக அமைய வேண்டும். அந்த ராகு தெய்வத்தின் அருள் கிடைக்க சில பூஜைகள் செய்ய வேண்டும்.
ராகுவிற்கு மிகவும் உகந்த பொருள் உளுந்து அல்லது கோமேதக கல். கோமேதகம் கல் மிகவும் விலை உயர்ந்தது. அதனால் அதனை வசதி படைத்தவர்கள் மட்டுமே வாங்க முடியும். ஆனால் உளுந்து என்பது நம் அனைவராலும் வாங்க கூடிய பொருள். இந்த உளுந்தை வாங்கி கோவிலில் ராகு மூலமும் முன்பு வைத்தும் வழிபடலாம். அல்லது துர்க்கை அம்மன் முன்பாக வைத்து ஓம் துர்காயை நமஹ என்னும் மந்திரத்தை 108 முறை கூறவேண்டும்.
அப்படி கூறி முடித்து தங்களுக்கு தேவையானதை வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி செய்தால் நமக்கு நல்ல நேரம் கூடி வரும். அதே போல அந்த உளுந்தை நாம் வீட்டிற்க்கு கொண்டு வரலாம். அல்லது கோவிலில் தானமாக கொடுத்துவந்தால் மிகவும் நல்லது. கோமேதக கல்லை வாங்க வசதி படைத்தவர்கள் அந்த கல்லை வாங்கி வீட்டு பூஜை அறையில் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் குங்கும பூஜை செய்யவேண்டும். அவ்வாறு செய்து அந்த குங்குமத்தை எடுத்து தினமும் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் நமது கெட்ட நேரம் விலகி, நல்ல நிறம் நம்மை தேடி வரும். நீங்கள் நினைத்த காரியம் வெற்றியுடன் சுலபமாக முடியும்.
டெல்லி : முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை…
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகி வந்த நிலையில், வார இறுதியில்…
கோவை : அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக திமுக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சாட்டையடி…
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…