மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்.! ஹவுஸ்மேட்ஸ்கள் கூறிய ஒரே பெயர்.!

Default Image

இந்த வார நாமினேஷனில் சனம் , ஷிவானி,அனிதா ஆகியோர் எஞ்சியுள்ள நிலையில் மூவரில் யார் தங்க வேண்டுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று கமல் கேட்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒருவர் எவிக்ட் ஆவது வழக்கம் .அந்த வகையில் இந்த வாரம் ஆரி, ஷிவானி,அனிதா , ஆஜீத்,ரம்யா,நிஷா மற்றும் சனம் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர் .இதில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுபவர் யார் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது

நேற்றைய தினம் ஆரி மற்றும் ரம்யா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர் . இந்நிலையில் தற்போது வெளியான பர்ஸ்ட் புரோமோவில்,நாமினேஷனில் சனம் , ஷிவானி மற்றும் அனிதா ஆகியோர் எஞ்சியுள்ளனர் . அதனையடுத்து மற்ற போட்டியாளர்களிடம் இந்த மூவரில் யார் தங்க வேண்டுமென்பது உங்கள் பரிந்துரை என்று கமல்ஹாசன் கேட்கிறார்.அதற்கு ரியோ , அர்ச்சனா,நிஷா ,ரம்யா ஆகியோர் சனம் அவர்களின் பெயரையும் , சோம் மற்றும் பாலாஜி ஆகியோர் ஷிவானி பெயரையும் ,ஆஜீத் அவர்கள் அனிதா பெயரையும் கூறுகின்றனர்.

மேலும் ஆரி அவர்கள் அனிதா வெளி செல்வார்கள் என்று நினைக்கிறேன் என்று கூற கமல் குறுக்கிட்டு யார் தங்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்று கேட்க சனம் பெயரை கூறுகிறார்.மொத்தத்தில் பிக்பாஸ் போட்டியாளர்களும் பலரும் சனமின் பெயரை கூறியுள்ளனர் .ஆனால் விதி அவர் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் வெளியேற உள்ளதாக கூறப்படுகிறது.ஏனெனில் அவர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்