சமையலுக்கு நீங்கள் இந்த எண்ணெயையா பயன்படுத்துகிறீர்கள்?
இந்தியாவில் வாழும் மக்கள் பெரும்பாலும் சமையலுக்கு விலை குறைந்த மலிவான எண்ணெய்களையே பயன்படுத்துகின்றனர்; மக்கள் இவ்வாறு ஏதோ ஒரு எண்ணெய், விலை குறைவாக இருந்தால் மட்டும் போதும் என நினைத்து வாங்கி பயன்படுத்த காரணமாக இருப்பது அவர்களின் பொருளாதார நிலையே! சிலர் பொருளாதார நிலை நன்கு இருப்பினும் ஆரோக்கியம் தரக்கூடிய எண்ணெயை விடுத்து, ஏதோ ஒரு எண்ணெயை அறியாமையால் பயன்படுத்தி வருகின்றனர்.
சமையலுக்கு பயன்படுத்த எது சிறந்த எண்ணெய், என்னென்ன எண்ணெய்களை சமையலுக்கு உபயோகிக்கலாம், அவற்றின் நன்மை – தீமைகள் என்னென்ன என்பனவற்றை இங்கு படித்து அறியலாம்.
ஆலிவ் எண்ணெய்
ஆலிவ் எண்ணெயை சாலட், குழம்பு, சூப், மேலும் பல உணவுப்பொருட்களை தயாரிக்க பயன்படுத்தலாம்; ஆலிவ் எண்ணெயானது உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும், இதனால் இதய ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் அதிக மருத்துவ குணங்களையும், பல நன்மை பயக்கும் விஷயங்களையும் கொண்டது. இதை என்ன தான் நாம் கூந்தலுக்கு, அடிபட்ட இடத்தில் மட்டும் என பயன்படுத்தி வந்தாலும், இது உணவுப்பொருட்களை சமைக்கவும் சிறந்தது. அதனால் தான் கேரளத்து மக்கள் இந்த எண்ணெயை உணவு சமைக்க பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் முடிந்தால் – பிடித்தால் முயற்சித்து பாருங்கள்!
காய்கறி எண்ணெய்
மேல்தட்டு மக்கள் காய்கறி எண்ணெய் என்பதனையும் சமையலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்ணெய் சூரிய காந்தி, சோயா பீன், சாஃப் ஃபிளவர் போன்றவற்றில் இருந்து எடுக்கப்படுகின்றன, இது கடலை எண்ணெய் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்களைப் போன்றதே!
கடலை எண்ணெய் & சூரியகாந்தி எண்ணெய்
இது இந்தியாவில் பரவலாக நடுத்தர வகுப்பு மக்கள் முதல் மேல்தட்டு மக்களால் பயன்படுத்தப்படும் எண்ணெய் ஆகும். இந்த எண்ணெய்கள் அனைத்து விதமான அடிப்படை உணவு பொருட்களையும் சமைக்க ஏற்றது. இவற்றை வாங்குகையில் நல்ல, வேதிப்பொருட்கள் ஏதும் கலக்காத எண்ணெயாக பார்த்து வாங்கி பயன்படுத்துங்கள்.
நல்லெண்ணெய் (எள்) & கடுகு எண்ணெய்
நல்லெண்ணெய் பரவலாக நம் இல்லங்களில் பயன்படுத்தப்படுவது தான்; முதுகு தொடர்பான பிரச்சனைகளுக்கு நல்லெண்ணெய் நல்ல பலனையும் வழங்கும். கடுகு எண்ணெய் அதிக பலன்களைக் கொண்டது; இதுவும் சமையலுக்கு பயன்படுத்த உகந்தது தான்.
இத்தனை வகை எண்ணெய்கள் பற்பல பயன்களை தருகையில், ஏதோ ஒரு எண்ணெயை – பாமாயில் போன்வற்றை தவிர்க்க முயலுங்கள். இங்கு கூறப்பட்டிருக்கும் எண்ணெய்களில் எது உங்கள் ஆரோக்கியத்திற்கும், பொருளாதார நிலைக்கும் பொருந்தும் என்பதை நன்கு படித்து பார்த்து, தீர விசாரித்து, அதை வாங்கி பயன்படுத்துங்கள்.