மீன் பிடிக்க சென்ற இடத்தில் சிறுவனின் கழுத்தை துளைத்து மறுபக்கம் வந்த மீன்.!

Default Image
  • இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான்.
  • அப்போது ஊசிமீன் பாய்ந்து  சிறுவனின் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது.

இந்தோனேசியாவை சேர்ந்த முகமது இதுல் என்ற 16 வயது சிறுவன் மீன் பிடிக்க சென்று உள்ளான்.அப்போது சிறுவன் மீன் பிடிக்க சென்ற இடத்தில் இருந்து ஒரு ஊசிமீன் பாய்ந்து  சிறுவனின் கழுத்தில் குத்தி உள்ளது.இதையெடுத்து அந்த மீன் கழுத்தில் குத்தி மறுபக்கம் வந்து உள்ளது.

பின்னர் அந்த சிறுவனை உடனே அவரது பெற்றோர்கள்  மருத்துவமனையில் அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மூன்று மருத்துவர்களும் இரண்டு மயக்க மருந்து நிபுணர்களும் சேர்ந்து  2 மணி நேரம் போராடி அந்த மீனை  சிறுவனின் கழுத்தில் இருந்து அகற்றினர்.

மீனை கழுத்தில் இருந்து அகற்றினாலும் சிறுவனுக்கு காய்ச்சல் இருப்பதால் தொடர்ந்து  மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த ஊசிமீன் மணிக்கு 60 கி.மீ வேகத்தில் தண்ணீரிலிருந்து வெளியே பாயக்கூடிய தன்மைகொண்டது . அதனால் தான் அந்த மீன் தண்ணீரிலிருந்து வெளியே பாய்ந்தபோது சிறுவனின் கழுத்தில் குத்தி  துளையிட்டு கொண்டு மறுபக்கம் வெளியே வந்துள்ளது.

Photo: Facebook/ Kreangsak Pengpinij, WikiCommons/ Christian Grill

இதற்கு முன்  ஊசி மீன் தாக்குதல்கள் நடந்துள்ளன .அதில் மேலும் பலர் பலத்த காயமடைந்துள்ளனர்.1977 -ம் ஆண்டு  தனது தந்தையுடன் இரவில் மீன்பிடிக்கும்போது 10 வயது ஹவாய் சிறுவன் மீது  ஊசி மீன் தாக்கியதில் அவரது கண் மற்றும் மூளைக்கு துளைத்து சென்றது.

பின்னர் தாய்லாந்து கடற்படை வீரர் ஒருவர் கடந்த 2018-ம் ஆண்டு 22 டிசம்பரில் ஒரு பயிற்சியின் போது ஊசி மீன் கழுத்தின் வழியாக வேகமாகச் சென்ற போது இறந்தார்.

 

 

 

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்