மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து விலகிய பிரமுகர்களிடம் உங்கள் விசுவாசம் எங்கே? முதல்முறையாக மக்கள் நீதி மையம் கட்சிக்கு வாக்களித்த மக்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள் என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமலஹாசன் அவர்கள் பெரும்பான்மையான இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அதிமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர்களாக இருந்தவர்களும் ஆங்காங்கு பல இடங்களில் நல்ல ஓட்டுகளை பெற்று இருந்தனர்.
அதுபோல மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் நடிகர் கமலஹாசன் அவர்களும் மிக சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தார்.இதனையடுத்து கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து தொடர்ச்சியாக அந்த கட்சியின் பொதுச்செயலாளர், துணைத் தலைவர் மற்றும் மதுரவாயலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர் பத்மபிரியா ஆகியோரும் கட்சியை விட்டு வெளியேறிய நிலையில், இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார் சனம் செட்டி.
அதில், உங்கள் விசுவாசம் எங்கே? கட்சியின் வேட்பாளராக பிரச்சாரம் செய்யும்போது மட்டும் எதற்காக சேர்ந்தீர்கள்? லட்சம் பேரிடம் ஏன் பேசினீர்கள். ஆனால் தற்பொழுது விலகும் போது மட்டும் தனிப்பட்ட காரணத்தால் விலகுகிறோம் என குறிப்பிட்டு விலகி இருக்கிறீர்கள் ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் கமலஹாசன் ஒரு அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லை எனவும், அவரின் தொலைநோக்கு பார்வை அவருக்கு போதும் எனவும் சனம் செட்டி பாராட்டி பதிவிட்டுள்ளார்.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைக்கும் செயல்முறையாக பார்க்கப்படும் ஸ்பேஸ் டாக்கிங் செயல்முறைக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ…
கடலூர் : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் தந்தை பெரியார் பற்றி பல்வேறு…
நியூ யார்க் : 2016 அமெரிக்க தேர்தல் சமயத்தில் நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் பணம் கொடுத்ததாகவும், அதனை தனது நிதி…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று டெல்லி சட்டசபை தேர்தலும், உ.பி மாநிலத்தில் ஒரு தொகுதி மற்றும் ஈரோடு…
சென்னை: நடிகர் சூர்யாவின் 44வது படமான ரெட்ரோ படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்துக்கு 'ரெட்ரோ' என…
கேரளா: மலையாள நடிகை ஹனிரோஸ் அளித்த பாலியல் புகாரில், பிரபல தொழிலதிபர் பாபி செம்மனூர் மீது வழக்குப்பதிவு செய்த எர்ணாகுளம்…