தமிழ் தெரியாதே போதே தல அஜித்தின் படத்தை ரசிப்பேன் – பிரணிதா.!
பிரணிதா சுபாஷ் தல அஜித்தின் தீவிர ரசிகை என்று கூறியதை அடுத்து ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கார்த்தியின் சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரணிதா சுபாஷ் . இந்த படத்தை சங்கர் தயாள் இயக்கியிருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து மாஸ் என்கிற மாசிலாமணி என்ற படத்திலும் நடித்துள்ளார். மேலும் பல தெலுங்கு மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இந்தாண்டு ஒரு பாலிவுட் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் காலெடுத்து வைக்கிறார். அஜய் தேவ்கன் மற்றும் சஞ்சய் தத் இருவரும் இணைந்து நடித்துள்ள புஜ் மற்றும் ஹங்கம்மா 2 ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்த இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தல அஜித் அவர்களின் தீவிர ரசிகை என்று பகிர்ந்து பதிவை அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். ஆம் அஜித்தின் மங்காத்தா பட புகைப்படங்களுடன் கூடிய பதிவு ஒன்றை ஷேர் செய்து, நான் தல அஜித்தின் தீவிர ரசிகை என்றும், எனக்கு தமிழ் தெரியாத போதே அவரின் இந்த படத்தை பல முறை பார்த்து ரசித்துள்ளேன் என்று பதிவிட்டிருந்தார். தற்போது தல அஜித்தின் ரசிகர்கள் பிரணிதாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.