டான் படத்தின் மூன்றாவது பாடல் வெளியீடு எப்போது ..? வெளியாகிய மாஸ் அபிடேட்…!

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள புதிய திரைப்படம் தான் தான் டான். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடெக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் கதாநாயகியாக பிரியா அருள் மோகன் அவர்கள் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா, சிவாங்கி மற்றும் சூரி ஆகிய பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அடுத்த மாதம் இந்தப் படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கான மூன்றாவது பாடல் வெளியீடு குறித்து அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் இருந்து பிரைவேட் பார்ட்டி எனும் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் வரிகளில் அனிரூத் மற்றும் ஜொனிடா இருவரும் இணைந்து இந்த பாடலை பாடி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!
March 16, 2025
சுனிதா – வில்மோரை மீட்கும் பணி வெற்றி.! பூமிக்கு திரும்பும்போது என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள்?
March 16, 2025