ரஜினியின் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . தற்போது கொரோனா அச்சம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது.
ஏனெனில் ரஜினிகாந்த் அவர்கள் இந்த படத்தினை விரைவில் முடித்து கொடுத்த பின்னரே அரசியலில் களமிறங்குவேன் என்று கூறியிருந்தார்.அவர் அரசியல் வருகை குறித்து கூறிய போது 40% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் இன்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடும் ரஜினிக்கு ரசிகர்கள் பலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில் அண்ணாத்த படத்தை தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அண்ணாத்த டீம் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 15 முதல் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளனர் . அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
விரைவில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட்டு படத்தினை தமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14-ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…