தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2015ல-ஆம் ஆண்டு ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் தனி ஒருவன். இந்த படத்தில் அரவிந்த் சாமி மாஸ்ஸான வில்லனாக நடித்து பிரமிக்க வைத்தார்.இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியின் இசையில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் படம் 100 கோடி வரை வசூல் செய்து சூப்பர் ஹிட்டானது.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜா தனி ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு அதற்கான கதை எழுதும் பணியை முடித்தார். ஜெயம் ரவிக்கு பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த காரணத்தால் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் ஒரு திரைப்படம் நடிக்கவுள்ளார். அதைபோல் இயக்குனர் மோகன் ராஜா லூசிஃபர் படத்தின் தெலுங்கு ரீ மேக்கை நடிகர் சிரஜ்ஜீவியை வைத்து எடுத்து வருகிறார்.
இந்த நிலையில், ஜெயம் ரவி பொன்னியின் செல்வன், கல்யாண் படம் முடித்து விட்டு வரும் போது இயக்குனர் மோகன் ராஜாவும் லூசிஃபர் படத்தை முடித்துவிடுவார். அதன் பிறகு தனி ஒருவர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…