ஆப்பிள் ரசிகர்களுக்கு ஜில் நியூஸ்.. ஐ-போன் 13 எப்பொழுது அறிமுகம் தெரியுமா?

Default Image

உலகளவில் ஐ-போன் 13 சீரிஸை செப்டம்பர் மாதம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

ஆப்பிள் நிறுவனம் ஒவ்வொரு ஆண்டு செப்டம்பர் மாதம் தனது ஐ-போன் மாடல்களை வெளியிட்டு வருவது வழக்கம். கடந்த ஆண்டு வினியோக பணிகளில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஐ-போன் 12 சீரிஸ் திட்டமிட்டபடி செப்டம்பர் மாதம் வெளியாகவில்லை. அதற்கு பதில் ஆக்டொபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் ஆப்பிள் ஐ-போன் 13 சீரிஸ் மாடல்களின் அறிமுகம் தாமதமாகும் என செய்திகள் வெளியான நிலையில், உலகளவில் ஐ-போன் 13 சீரியஸை செப்டம்பர் மாதம் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதனால் ஆப்பிள் ரசிகர்கள், மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர். ஐபோன் 13 சீரிஸ், 13, 13 மினி, 13 ப்ரோ, 13 ப்ரோ மேக்ஸ் உள்ளிட்ட நான்கு மாடல்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று MacRumors வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள், ஐபோன் 12 சீரிஸை விட பல மடங்கு மேம்பட்ட மாடல்களாக இருக்கும் என்று தகவல்கள் கூறுகிறது. குறிப்பாக A 15 பயோனிக் சிப், சிறிய டிஸ்பிளே நாட்ச், அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிளே, மேம்படுத்தப்பட்ட கேமராக்கள், புதிய வண்ணங்களுடன் வெளியாகும் என்றும் அந்த வலைத்தளத்தில் செய்திகள் வெளியானது.

ஆப்பிள் நிறுவனம், ஆண்டுதோறும் தனது ஐ-போன் மாடல்களுடன் ஏதாவது ஒரு சாதனத்தை அறிமுகம் செய்யும். கடந்தாண்டு ஹோம்பாட் மினி ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ள நிலையில், இந்தாண்டு எத்தனை அறிமுகம் செய்யுமென்று ரசிகர்கள் உட்பட பலரும் மிக ஆர்வமாக உள்ளனர். மேலும், தற்பொழுது இந்தியாவில் ஆப்பிள் மொபைல் தயாரிப்பு நிறுவனம் வந்துள்ளதால், இந்த 13 சீரிஸ் இந்தியாவில் உருவாக்கப்பட்டால் விலை சற்று குறைய வாய்ப்புள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்