பழங்களை எப்போது சாப்பிட வேண்டும் தெரியுமா? இத்தனை நாள் இப்படியா சாப்டீங்க.!

Default Image

பழங்கள் தப்பா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் பழங்களை தவறாக உண்பதால் நமக்கு அதில் உள்ள நன்மைகள் அனைத்தும் கிடைக்காமல் போய்விடும். பழங்களை எப்படி சரியாக உண்பது என்பதை பார்ப்போம்.

சிலர் சாப்பிட்ட உடனே பழங்களை சாப்பிடுவர்கள்.அதிலும்,  சப்பாத்தி,தோசை,இட்லி சாப்பிட்டு பழங்களை சாப்பிடுவது இந்த முறை மிகமிக தப்பு ஏனென்றால் பழங்கள் எளிதில் ஜீரணமாகக்கூடியது. சப்பாத்தி சாப்பிடும் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் ஆக நேரம் ஆகுமாம். மேலும் ஏப்பம் அல்லது மூச்சுத் திணறல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்றால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.

இப்போல்லாம் சில பேர் அலுவலகத்துக்கு பணிக்கு  செல்லும் பணியாளர்கள் பழங்களை வெட்டி எடுத்துச்சென்று அங்கு வைத்து  சாப்பிடுவார்கள். ஆனால் இது தப்பு ரொம்ப நேரம் கழித்து சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்கள் போய்விடும் என்று கூறப்படுகிறது.

நம் ஊரில் விளையக்கூடிய பழங்களை முக்கியமாக சாப்பிட வேண்டும். சிலர் வெளிநாட்டில் உள்ள பழங்களை சாப்பிடுவது பேஷன் என்ற பெயரில் சாப்பிட்டு விடுகிறார்கள். அதில் உள்ள சத்துக்கள் நம்ம ஊரு மண்ணிற்கு விளையும் பழத்தின் சத்துக்கு ஈடாகாது. முக்கியமாக நம் ஊரில் விளையகூடிய கொய்யா பழம் மாம்பழம் அந்தந்த சீசனுக்கு ஏற்ப பழங்களை சாப்பிட வேண்டும். இதனால் ரொம்ப சத்துக்கள் கிடைக்கின்றது.

சிலர் பழங்களை ஜூஸாக குடிக்கிறார்கள் பழங்களை ஜூஸாக குடிப்பதால் நார்ச்சத்து கிடைப்பது தடுக்கப்படுகிறது. ஜூஸில் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு கெடுதல் ஆகும். முக்கியமாக மிக்ஸியில் அடித்து குடிக்கிறார்கள் அதனால் பாதிப்பு என்று சொல்லப்படுகிறது.  சிலர் பாலுடன் பழங்களை ஜூஸ் பண்ணி சாப்பிடுவது அல்லது கட் செய்து போட்டு சாப்பிடுவது நல்லது ஆனால் அவ்ளோ பலன் கிடையதாம்.

வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது. ஏனென்றால் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிடுவதால் அதில் உள்ள சத்துக்களை வெகுவாக உறிஞ்சப்படுகிறது. சாப்பாட்டுக்கு 2 மணி நேரத்துக்கு முன்னால் சாப்பிட்ட 2 மணி நேரத்துக்கு பிறகு பழத்தை சாப்பிட வேண்டும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்