ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள RRR படத்தினை அடுத்த வருடம் ஜூலையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘இரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR)’. 350 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு எம். எம். கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவ்ன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. மேலும் இந்த படத்தின் லோகோ மற்றும் மோஷன் போஸ்ட்ர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது.மேலும், சமீபத்தில் ராம்சரணின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் பர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு வரவேற்பைப் பெற்றது.
2021ல் ஜனவரி 8ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்த இந்த படம், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக படப்பிடிப்புகள் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலை ஏற்பட்டுள்ளதால் படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்றுள்ளது. தற்போது இந்த படத்தை 2021ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் பலர் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…