விக்ரம் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெகு நாட்களாக கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ரிலீஸ் குறித்து கூறியுள்ளார் கெளதம் மேனன் .
தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குநர்களில் ஒருவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது படங்கள் அனைத்தும் ரசிக்க தக்கதாக இருப்பது மட்டுமில்லாமல் அதில் நடிப்பவர்கள் கெத்தாகவும் காட்டியிருப்பார். இவர் பல படங்களில் நடித்தும் உள்ளார்.இவரது இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் எனை நோக்கி பாயும் தோட்டா. இந்த படத்தில் தனுஷ் அவர்கள் ஹீரோவாக நடித்திருந்தார். அதனையடுத்து அடுத்ததாக இவர் தயாரிக்கும் திரைப்படம் ‘ யோசுவா இமை போல் காக்க’ இந்த படத்தில் வருண் நாயகனாக நடிக்கவிருக்கிறார். மேலும் இவரது இயக்கத்தில் உருவாகி வரும் துருவ நட்சத்திரம் படம் பல மாதங்களாக கிடப்பில் உள்ளது. சியான் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்ரன், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும் கௌதம் மேனன் மற்றும் ஈஷாரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ரிலீஸ் குறித்து கௌதம் மேனனிடம் கேட்கையில், இந்த படத்தின் வேலைகள் அனைத்தும் லாக்டவுன் முடிந்ததும் தொடங்கப்படும் என்றும், விரைவில் துருவ நட்சத்திரம் படம் திரைக்கு வரும் என்றும் நம்பிக்கையாக தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…