உங்களது சருமம் எப்போது எண்ணெய் பசையுடன் காணப்படுகிறதா..? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்..!

Default Image

சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை  போக்குவதற்கு என்ன செய்யலாம்?

இன்றைய இளம் தலைமுறையினர் தங்களது சரும அழகை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில், எப்பொழுதுமே சருமத்தில் எண்ணெய் வழிந்து கொண்டே இருக்கும் சருமத்தை உடையவர்கள் அதனை போக்குவதற்கு பல வகையான முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதனால் பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறதே தவிர அவர்களது பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தபாடில்லை.  அந்த வகையில் தற்போது சருமத்தில் காணப்படக்கூடிய எண்ணெய் பசையை  போக்குவதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி பார்ப்போம்.

தேவையானவை

  • முல்தானி மெட்டி – ஒரு ஸ்பூன்
  • சந்தனம் – ஒரு ஸ்பூன்
  • காய்ச்சாத பசும் பால் – சிறிதளவு

செய்முறை

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு சுத்தமான பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பசும் பாலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை சருமத்தில் அப்ளை செய்த பின் 20 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.

அதன் பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை தொடர்ந்து செய்து வந்தால் சருமத்தில் எண்ணெய் பசை நீங்கி சருமம் பளபளப்பாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்