விரைவில் அஜித்தின் வலிமை படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில், வருகிற பிப்ரவரி மாதம் வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஹெச்.வினோத் அவர்களின் இயக்கத்தில் தல அஜித் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படம் தான் வலிமை. போனி கபூர் தயாரிப்பில் உருவாகக்கூடிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி அவர்கள் நடித்து வருகிறார். மேலும், நடிகை சுமித்ரா அவர்கள் அம்மா கதாபாத்திரத்திலும் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் இவர்கள் தவிர யோகி பாபு, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புகழ் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் இசை அமைத்துள்ளார்கள்.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் அனைவருமே வலிமை படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வலிமை எனும் டைட்டில் பெயரைத் தவிர வேறு எந்த ஒரு அப்டேட்டும் இந்த படம் குறித்து வராததால் சோகத்தில் ரசிகர்கள் காணப்பட்டனர். இந்நிலையில் ரசிகர்கள் அனைவரையும் உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ஒரு புதிய அப்டேட் கிடைத்துள்ளது. வலிமை படத்திற்கான கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடந்து வரும் நிலையில், இத்துடன் வலிமை இப்படத்திற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலிமை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் காணப்படுகின்றனர்.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…