கோதுமை கஞ்சி ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்யுமா….?
கோதுமையில் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆற்றல்களும் உள்ளது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது. இது நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும் உட்சாகத்தையும் தரக்கூடியது.
முதுகுவலி, மூட்டு வழியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வலி குறைந்துவிடும். கோதுமை மலட்டு தன்மையை நீக்கும். மலச்சிக்கலையும் நீக்க கூடியது.
தினமும் கோதுமையை உணவில் சேர்த்து வந்தால், இரத்தத்தில் உள்ள நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்தமாகும். கோதுமை மாவில் கஞ்சி காய்ச்சி அருந்தி வந்தால் மாதவிடாய் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
கர்ப்பகாலத்தில் உள்ள தாய்மார்களுக்கு காலில் சுரம் ஏற்பட்டால் நீர் நன்கு போவதற்காக கோதுமை கஞ்சி குடிக்கலாம். கொலஸ்ட்ராலை குறைப்பது கோதுமை கஞ்சி மிக முக்கிய பங்காற்றுகிறது.
வேர்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த நீரில் கலந்து பூசிவர விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்வதால் உடல் பலம் அதிகரிக்கும்.
கோதுமை கஞ்சி செய்து சாப்பிட காசநோய் உள்ளவர்கள் விரைவில் உடல்நலம் தேறுவார்கள். ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்வதில் கோதுமை கஞ்சி முக்கிய பங்காற்றுகிறது.