மாலை நேரம் ஆனாலே குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் டீ, காபி குடிக்கும் பொழுது ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட வேண்டும் என விரும்புவது வழக்கம். இதற்காக நாம் கடையில் எப்பொழுதும் பணத்தை கொடுத்து வடை, முறுக்கு வாங்கி விடுவோம். இனிமேல் பணத்தைக் கொடுத்து வீணாக்காதீர்கள். வீட்டிலேயே ஒரு கப் கோதுமை மாவு இருந்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார் செய்யலாம். எப்படி செய்வது என பார்க்கலாம் வாருங்கள்.
முதலில் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு இதனுடன் மிளகாய்த் தூள், சீரகத் தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி வைத்துக் கொள்ளவும். பின்பு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு பிசைந்து எடுத்துக்கொள்ளவும். சப்பாத்தி மாவு பதத்திற்கு வரும் வரை பிசையவும்.
கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தேவையானவர்கள் சேர்த்துக்கொள்ளலாம். அதன் பின்பு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அவற்றை சப்பாத்திக் கல்லில் வைத்து தட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். அதன்பின் அழகுக்காக முள் கரண்டி வைத்து ஆங்காங்கு புள்ளிகள் போட்டு வைத்துக் கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் நாம் தட்டி வைத்துள்ள மாவை போட்டு பொரித்தெடுத்தால் அட்டகாசமான ஸ்நாக்ஸ் தயார்.
சென்னை : தெற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிகளிலும் அதை ஒட்டிய கிழக்கு பூமத்திய ரேகை இந்தியப் பெருங்கடலின் மத்திய…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்து எப்போது தொடங்கும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இன்று சென்னை தலைமை…
டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி…
சென்னை : சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜூன் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'புஷ்பா-2' திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதற்காக அதானி நேரில்…
பெர்த் : ஆஸ்திரேலியாவுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் தடுமாறினாலும் அதன்பிறகு பவுலிங்கில் இந்திய அணி…