வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates.. குழப்பத்திற்கான பதில்கள் இதோ!

Default Image

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates குறித்து பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருவதால், பயனர்கள் குழப்பமடைந்துள்ளனர். 

புதிய Terms and Privacy Policy:

வாட்ஸ்அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates-ஐ ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால், பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் வாட்ஸ் அப் எடுக்காது என்று வாட்ஸ்அப் நிறுவனம் அண்மையில். அறிவித்துள்ளது. அதில் வணிகப் பயன்பாட்டிற்காக பயனாளிகளின் தகவல்கள் அனைத்தையும் அதன் தாய் நிறுவனமான பேஸ்புக்கிற்கு பரிமாறப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் பயனர்கள் பலரும் குழப்பமடைந்தனர்.

அதன்படி, பேஸ்புக்கிற்குச் சொந்தமான மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற தளங்களில் நமது செய்தி தளம் மூலம் சேகரிக்கப்பட்ட மெட்டாபெஸின் அடிப்படையில் நிறுவனம் உங்களுக்கு விளம்பரங்களைக் காண்பிக்கும் என கூறுகிறது.

எதிர்ப்புகள்:

வாட்ஸ்அப்-ன் இந்த புதிய Terms and Privacy Policy-க்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதற்கு மாறாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக, சிக்னல் செயலியை உபயோகிக்க எலான் மஸ்க் பரிந்துரைத்தால், அதனை இந்தியர்கள் பலரும் உபயோகிக்க தொடங்கிவிட்டார்கள்.

விளக்கம்:

இந்தநிலையில், வாட்ஸ்அப் பிரைவசி குறித்து பயனர்களிடம் உள்ள குழப்பத்தை தீர்க்க அந்நிறுவனம் அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்து வாட்ஸ்அப் கூறுகையில், பயனர்களின் தகவல்கள் பகிரப்பட மாட்டாது என விளக்கமளித்தது. மேலும், பயனர்களின் தனிப்பட்ட குறுந்செய்திகளை எங்களால் பார்க்கவோ அல்லது உங்கள் அழைப்புகளைக் கேட்கவோ முடியாது என்றும், யார் செய்தியினை அனுப்புகிறார்கள் அல்லது அழைக்கிறார்கள் என்பதற்கான பதிவுகளை வைத்திருக்கவும் மாட்டோம், வெளியிடவும் மாட்டோம் என்றும் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்