வாட்ஸ்அப் பயனாளர்களே.! நீங்கள் ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க வேண்டுமா.? உடனடியாக இதை செய்யுங்கள்.!

Default Image
  • பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன.
  • வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் இதுபோன்ற  சிக்கலில் உள்ளனர். அதிலிருந்து காப்பாற்றிக்கொள்ள கீழே உள்ள விபரங்களை பின்பற்றவும்.

பொதுமக்கள் ஆகிய நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு அப்ளிகேஷன் மூலமாகவும், இணையதளத்தில் பொருட்கள் வாங்கும் போதும், தங்களுடைய அனைத்து விபரங்களையும் ஹேக்க செய்யப்பட்டு வருகிறது. அதனால நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அந்த வகையில், பேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் சில பாதுகாப்பு மற்றும் ப்ரைவஸி கோளாறுகள் இருக்கத்தான் செய்கின்றன. முக்கியப் பிரபலங்கள் முதல் சாதாரண பொதுமக்கள் வரையில் ஹேக்கர்களின் கைவரிசைக்கு யாரும் விதிவிலக்கு அல்ல.  இதில் பிரபலங்களின் தனிப்பட்ட தகவல்கள் உட்பட பொதுமக்களின் வங்கி, பண விவரங்கள் வரையில் அனைத்தையும் வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்யப்படுகிறது.

இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் சுமார் 1.6 பில்லியனுக்கு அதிகமானோர் சிக்கலில் உள்ளனர். ஆனால், வாட்ஸ்அப் பயன்படுத்தும் நீங்கள் உங்களுக்கான பாதுகாப்பை இந்த ஒரு சின்ன செயலால் உறுதி செய்ய முடியும். வாட்ஸ்அப் செயலியை ஓப்பன் செய்யுங்கள். Settings -> Account -> Two-Step Verification க்ளிக் செய்து Enable என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் 6 இலக்க PIN நம்பர் உருவாக்கவும். பின்னர் தொடர்ந்து உங்களது மெயில் உடன் 2 ஸ்டெப் வெரிஃபிகேஷன் இணைத்தால் பயனுள்ளதாய் இருக்கும். காரணம், உங்களது வாட்ஸ்அப் கணக்கை ஹேக்கர் ஒருவர் ஹேக் செய்யும் போது நீங்கள் உருவாக்கிய 6 இலக்க PIN எண் ஹேக்கருக்கு ஒரு தடையாக இருக்கும். இதனை உடனடியாக உங்களது வாட்ஸ்அப்-யில் செய்துகொண்டு ஹேக்கர்களிடமிருந்து தப்பித்துக்கொள்ளவும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்