வாட்ஸ் ஆப்-ல் அடுத்த வரவுள்ள அப்டேட் இதுதான்!
இனி வாட்ஸ் ஆப் மூலம் ஒருவருக்கு வீடியோ அனுப்பினால், அதனை சவுண்ட் இல்லாமல் அனுப்பலாம். அதற்கான பரிசோதனைகளை வாட்ஸ் ஆப் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
உலகளவில் வாட்ஸ் ஆப் உபயோகிக்காத மக்களே இல்லை. பள்ளி மாணவர் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உபயோகித்து வருகின்றனர். தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை என ஆகிவிட்டது. அரட்டை, செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் இந்த வாட்ஸ்அப் செயலி உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.
இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து புதிது, புதிதாய் அப்டேட்-ஐ வெளியிட்டு வரும் நிலையில், அண்மையில்“சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. இது பலரிடம் வரவேற்பை பெற்று வந்த நிலையில், நாம் அனுப்பும் விடியோக்களின் ஆடியோவை “மியூட்” செய்யும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்தது.
— Hello Kitty (@2403Hellokitty) November 18, 2020
அதற்கான பரிசோதனைகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியானது. அதனை வாட்ஸ் ஆப் பீட்டா உறுதிப்படுத்தியது. மேலும், அந்த ஆடியோவை உங்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸிலும் வைத்துக்கொள்ளலாம் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புதிதாய் பல வால்பேப்பரும் (wallpaper) புதிதாய் disappearing messages எனும் சேவையையும் வழங்கியது. இதன்மூலம் நாம் அனுப்பும் செய்திகள், 7 நாட்களுக்கு அவர்களுக்கு தெரியாது என கூறப்படுகிறது.