Whatsapp Terms and Privacy Policy.. இதனை செய்யாவிட்டால் உங்களின் அக்கவுண்ட் “டெலீட்” ஆக வாய்ப்பு!
வாட்ஸ் அப்-ன் புதிய Terms and Privacy Policy Updates பிப்ரவரி 8, 2021 முதல் நடைமுறைக்கு வரும் எனவும், அதனை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்களின் வாட்ஸ் அப் அக்கவுண்ட் டெலீட் ஆக வாய்ப்புள்ளது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. சாட் செய்வது, செய்திகளை தெரிந்துக் கொள்வது உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.
இந்நிலையில் வாட்ஸ்அப், இந்தாண்டு ஜனவரி முதல் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அது, வாட்ஸ்அப்-ன் Terms and Privacy Policy Updates -ஐ கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனுடன் உடன்பாடு இல்லையெனில், உங்களது வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது. இந்த செய்தியை ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் வாட்ஸ் அப் உபயோகிக்கும் அனைவருக்கும் ஒரு போட்டிபிகேஷன் மூலம் அனுப்பப்பட்டது. அந்த போட்டிபிகேஷனில் “allow” என்பதை கொடுக்க வேண்டும் என தெரிவித்தது.
இந்த விதிகளின்படி, வணிகப்பயன்பாட்டிற்காக பயனர்களின் சாட்களை நிர்வகிப்போம். தங்களின் தாய் நிறுவனங்களாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வணிக ரீதியாக பயனர்களின் தகவல்களை பயன்படுத்தும் என்றும், பயனர்கள் புதிய விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவர்களின் வாட்ஸ்அப் கணக்குகள் நீக்கப்படம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக WABetaInfo கடந்த மாதம் தெரிவித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.