Whatsapp பயனர்களே உஷார்: OTP மூலமாக திருடப்படும் தகவல்கள்.. இதனை செய்தால் பாதுகாக்கலாம்!
வாட்ஸ்அப் செயலியில் OTP ஸ்கேம் தொடர்பான புகார்கள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், அதில் இருந்து உங்களின் வாட்ஸ்ஆப் தகவல்களை பாதுகாப்பது குறித்து காணலாம்.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால் எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை உள்ளிட்ட நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் பேசி மகிழலாம். அந்தவகையில், வாட்ஸ்ஆப் செயலியை தற்பொழுது ஹேக்கர்கள் குறிவைத்துள்ளனர். சமீபத்தில் வாட்ஸ்அப் தொடர்பான பல முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதில் குறிப்பாக, வாட்ஸ்அப் OTP ஸ்கேம்.
OTP ஸ்கேம்:
அந்தவகையில் இந்த வாட்ஸ்அப் OTP ஸ்கேம் மூலம் ஹேக்கர்கள், உங்களின் காண்டக்ட்டில் இருக்கும் நண்பர் எனக்கூறி உங்களிடம் உரையாடுவார்கள். அதவாது, உங்களின் நண்பரின் வாட்ஸ்ஆப் கணக்கை ஹேக் செய்து, அதன்மூலம் உங்களின் நம்பரை எடுத்து தொடர்புகொள்வார்கள். அவர்களின் பேசினால் உங்களை நம்பவைத்து, தங்களின் காரியத்தை முடித்துவருக்கார்கள்.
எப்படி பேச ஆரமிப்பார்கள்:
அவர்கள், முதலில் உங்களிடம் சிறிய உதவி வேண்டும் என தங்களின் பேச்சை தொடங்குவார்கள். அதன்பின் உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒரு OTP தவறுதலாக பார்வர்ட் செய்யப்பட்டுவிட்டதாகவும், அதை திருப்பி அனுப்புமாறு கூறுவார்கள். அவ்வாறு நீங்கள் அனுப்பும் எண்களை வைத்து உங்களின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள். அந்த OTP எண்ணை வைத்து ஹேக்கர்கள், உங்களின் வாட்ஸ்அப் கணக்கை ஹேக் செய்வார்கள்.
அவ்வாறு ஹேக் செய்துவிட்டார்கள் என்றால், உங்களின் வாட்ஸ்அப் அக்கவுண்ட் லாக் அவுட் ஆகும். மேலும், முதல் உங்களின் வாட்ஸ்அப் மெசேஜ்கள், காண்டாக்ட் விபரங்கள், பேக்கப் செய்யப்பட்ட தகவல்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களை ஹேக் செய்துவிடுவார்கள். அதுமட்டுமின்றி, உங்களின் நண்பர்களிடம் பணஉதவி கேட்பது, உங்களின் காண்டாக்ட்-ல் இருக்கும் பெண் நண்பர்களிடம் தவறாக பேசுவது உள்ளிட்ட பல மோசடி சம்பவங்களை செய்வார்கள்.
பாதுகாக்கும் வழிமுறை:
இதில் இருந்து உங்களின் அக்கவுண்ட்டை பாதுகாக்க வேண்டுமானால், அதேபோல OTP உங்களுக்கு வந்தால் அதனை பகிராதீர்கள். அதனைத்தவிர்த்து, முதலில் டூ ஸ்டேப் வெரிஃபிகேஷன் (2 step verification) செய்துவிட வேண்டும். அதனை எப்படி செய்வது குறித்து காணலாம்.
- முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்யவும். பின் மேலே இருக்கும் மூன்று புள்ளிகளை தொடவும்.
- அதன்பின் Settings-க்குள் சென்று, Account-ஐ தேர்வு செய்யவும்
- பின்னர் Two-Step Verification.-ஐ தேர்வு செய்யவும்.
- அடுத்த, 6 டிஜிட் நம்பரை குடுக்குவும் (குறிப்பு: இதனை உங்களின் வாட்ஸ்ஆப்-ல் save செய்து வைக்காதீர்கள், யாரிடமும் பகிரவும் செய்யாதீர்கள்). மீண்டும் அந்த நம்பரை என்டர் செய்யவும்.
- உங்களின் மெயில் ஐடி-ன் படி, மீண்டும் அந்த 6 டிஜிட் நம்பரை என்டர் செய்யவும்.
- நீங்கள் மெயில் ஐடியை உறுதிப்படுத்தும்போது, உங்கள் two-step verification ஆக்டிவேட் ஆகும்.
- அதேபோல, நீங்கள் அந்த நம்பரை மாற்றவும் செய்யலாம்.
மேலும் வாட்ஸ்அப் செயலிக்குள் போகும்போது அடிக்கடி அந்த நம்பரை என்டர் செய்ய சொல்லும். இதன்மூலம் உங்களின் வாட்ஸ்அப் கணக்கை பாதுகாத்துக்கொள்ளலாம்.