வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் உலகம் முழுவதும் பல பகுதிகளில் தொழில்நுட்ப கோளாறை காரணமாக முடங்கியது.இந்த மூன்றும் ஃபேஸ்புக் நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.
வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் சர்வர்கள் தற்போது செயலிழந்துள்ளன. மக்கள் வாட்ஸ்அப் செய்திகளை பரிமாறிக்கொள்ள முடியவில்லை. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் இணையதளங்கள் இணைய உலாவிகளில்(Browsers) திறக்கப்படவில்லை. இன்ஸ்டாகிராம் பக்கம் 5xx சர்வர் பிழை செய்தியை காட்டுகிறது.
ட்விட்டர் மற்றும் பிற சமூக ஊடக வலைத்தளங்களில் உள்ள பல பயனர்கள் செயலிழப்பு குறித்து தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பதிவிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு மன்னிக்கவும் அதனை சரிசெய்ய முயற்சி எடுத்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டரில் செயலிழப்பை வாட்ஸ்அப் ஒப்புக்கொண்டது:
இந்த நேரத்தில் சிலர் வாட்ஸ்அப்பில் சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள் என்பதை நாங்கள் அறிவோம்.இந்த பிரச்சனையை சரி செய்து இயல்பு நிலைக்கு கொண்டுவர நாங்கள் பணியாற்றி வருகிறோம், கூடிய விரைவில் இங்கே ஒரு புதுப்பிப்பை அனுப்புவோம் என்று பதிவிட்டுள்ளது.
பெங்களூர் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. பெங்களூரு சின்னசாமி…
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…