வாட்ஸ்-அப்பின் புதிய பிரைவசி கொள்கையை ஏற்காவிட்டால் பயன்பாட்டின் சேவைகள் குறையும் என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வாட்ஸ்-அப் வெளியிட்ட புதிய தனிநபர் கொள்கைகள் பயனாளர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.அதாவது,வாட்ஸ்-அப்பின் புதுப்பிக்கப்பட்ட சேவை விதிமுறையின் அடிப்படையில் வாட்ஸ்-அப் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் சேகரித்து அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட பல வணிக நிறுவனங்களுக்கு விற்பது தொடர்பான கொள்கை விதிமுறைகள் அதில் இடம் பெற்றிருந்தன.மேலும்,இந்த புதிய கொள்கையை மே 15 ஆம் தேதிக்குள் ஏற்காவிட்டால் வாட்ஸ்-அப் கணக்கு முழுமையாக நீக்கப்படும் என தெரிவித்திருந்தது.
இதனையடுத்து,பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்பு, மே 15 ஆம் தேதிக்குப் பிறகு புதிய கொள்கைகளை ஏற்காதவர்களின் வாட்ஸ்-அப் கணக்கு நீக்கப்படாது என்றும்,ஆனால் வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் விரைவில் நிறுத்தப்படும் என்றும் கூறியிருந்தது.
இந்நிலையில்,புதிய கொள்கையை நினைவுபடுத்தும் விதமாக,பல நாட்களுக்குப பிறகு,வாட்ஸ்-அப் தற்போது கணக்கு புதுப்பிப்பு பற்றிய தகவலை அறிவித்துள்ளது.அதில்,’புதிய கொள்கையை ஏற்காவிட்டால் கணக்கு நீக்கப்படாது.ஆனால்,வாட்ஸ்-அப்பில் உள்ள பல வசதிகள் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதாவது,புதிய கொள்கையை ஏற்காத பயனாளர்கள் வாட்ஸ்-அப் சேட் லிஸ்ட்டை பயன்படுத்த முடியாது.அதற்குப்பதிலாக,வாட்ஸ்-அப்பில் இன்கம்மிங் கால் மற்றும் வீடியோ கால்களில் பேச முடியும்.மேலும்,நோட்டிபிகேஷன் எனேபிள்(Enable) செய்திருந்தால் வரும் மெசேஜ்களை படிக்க முடியும்.
அதன்பிறகும் புதிய கொள்கையை ஏற்காவிட்டால் மெசேஜ் அனுப்புதல் மற்றும் இன்கம்மிங் கால் வசதிகள் முழுமையாக நிறுத்தப்படும்.எனினும், அனைத்து பயனாளர்களுக்கும் ஒரே நேரத்தில் இது நடக்காது என்று வாட்ஸ்-அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…