உலக அளவில் பல கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப்(மெட்டா) நிறுவனம் தங்களது பயனர்களின் தனியுரிமையை எளிதாகக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் சில புதிய அம்சங்களை அவ்வப்போது வெளியிடுகிறது.இந்நிலையில்,உங்கள் சுயவிவரப் படம்(profile picture) உள்ளிட்ட தகவல்களை மறைக்கும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி,வாட்ஸ் அப் பயனர்கள் தங்களது ப்ரைவசி அம்சம் மூலம் status,about ஆகியவற்றை மட்டுமே யார் பார்க்கலாம் என்று நிர்ணயித்து வந்த நிலையில்,தற்போது profile picture யார் யாருக்கு தெரியும்படி வைக்கலாம், last seen-ஐ யார் பார்க்கலாம் என்ற புதிய அம்சத்தையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும்,புதிதாக தொடங்கப்படும் வாட்ஸ் அப் குரூப்களில் யாரெல்லாம் தங்களை இணைக்கலாம் என்ற ப்ரைவசி கட்டுப்பாட்டு அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில்,வாட்ஸ்அப் குரூப்பில் இதுவரை 256 நபர்களை மட்டுமே சேர்த்துக்கொள்ளும் வசதி இருந்த நிலையில்,இனி ஒரே வாட்ஸ்அப் குரூப்பில் 512 உறுப்பினர்களை வரை சேர்த்து கொள்ளும் வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.மேலும்,இதுவரை வாட்ஸ்அப்பில் பயனர்கள் தங்கள் தொடர்புகளுக்கு குறைந்த அளவிலான கோப்புகளை (Files) மட்டுமே அனுப்ப முடியும்.குறிப்பாக,100 MB க்கும் மேற்பட்ட பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாத நிலை இருந்து வந்த நிலையில்,2ஜிபி வரையிலான போட்டோ,வீடியோ போன்றவற்றை பகிரும் வசதியும் வாட்ஸ்அப் சில தினங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து,வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பிய பிறகும் திருத்தம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அண்மையில் தகவல் வெளியாகியது.அதன்படி,வாட்ஸ்அப் மெசேஜிங் ஆப்ஸ்,ஆப்ஸின் பீட்டா பதிப்பில் உள்ள எடிட் வசதியை வாட்ஸ்அப் சோதித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…