வாட்ஸ்அப் நிறுவனம், தற்பொழுது “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது.
தற்போதுள்ள காலகட்டத்தில் வாட்ஸ்அப் இல்லையென்றால், எதுவுமே இல்லை. அரட்டை. செய்திகள் முதல் ஆன்லைன் கிளாஸ் வரை நமது அனைத்து பயன்பாட்டிற்கும் உதவுகிறது, இந்த வாட்ஸ்அப் செயலி. மேலும், வெளிநாட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் விடியோ மற்றும் ஆடியோ கால் மூலம் இலவசமாக பேசி மகிழலாம்.
இந்தநிலையில், வாட்ஸ்அப் செயலியில் தொடர்ந்து அம்சங்களை வெளியிட்டு வந்த நிலையில், தற்பொழுது பயனர்களின் “சாட்”-ஐ நிரந்தரமாக மியூட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியது. முதலில், குறிப்பிட்ட நேரம் வரையில் மட்டுமே மியூட் செய்யும் வசதி இருந்த நிலையில், தற்பொழுது அது நிரந்தரமாக மியூட் செய்து கொள்ளலாம். இதன்மூலம் நம்மை மெசேஜ் மூலம் இம்சை செய்பவர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
இந்த புதிய அம்சத்தை பலரும் வரவேற்று வரும் நிலையில், “லாக்-அவுட்” செய்யும் அம்சத்தையும் கூடுதலாக வழங்கினால் நன்றாக இருக்கும் என சில பயனர்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். மேலும், இது பலரின் பலஆண்டுகளாக வைக்கப்பட்டும் கோரிக்கையாகும், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் உள்ளிட்ட செயலிகளுக்கு வழங்கப்பட்ட மாதிரியே, வாட்ஸ்அப் செயலியிலும் வழங்க வேண்டும் என பலரும் சமூகவலைத்தளத்தில் கோரிக்கை விடுத்து வருவது, குறிப்பிடத்தக்கது.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…