இனி இன்டர்நெட் இல்லாமல் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் -வாட்ஸ் அப் நிறுவனத்தின் புதிய முயற்சி!

Default Image

உலகம் முழுவதும் உள்ள அனைத்து மக்களாலும் அதிகம் பயன்படுத்தப்படும் செயல்களில் ஒன்றாக தற்போது  வாட்ஸ் ஆப்  உள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு  சொந்தமான வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவலை பாதுகாக்காவும் , அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வாட்ஸ் ஆப் நிறுவனம் செய்து வருகிறது.

Image result for வாட்ஸ் ஆப் கியூ ஆர் கோட்

வாட்ஸ் அப் அப்டேட்களில் டெஸ்க்டாப் வெர்ஷன் புகழ்பெற்ற ஒன்றுதான். அலுவலகங்களில் வாட்ஸ் அப்பை  எளிதாக  பயன்படுத்துவதற்காக டெஸ்க்டாப் வெர்ஷன் மிகவும் பயன்படுகிறது. வாட்ஸ் அப் செயலியின் கியூ ஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறோம்.

கணினியில் வாட்ஸ் அப்பை பயன்படுத்த வேண்டும் என்றால் செல்போனில் இன்டர்நெட்  ஒன் செய்ய வேண்டும். செல்போனில் இன்டர்நெட்டை  இணைக்கப்படாமல் வாட்ஸ் அப்பை கணினியில் பயன்படுத்த முடியாது.

Image result for வாட்ஸ் ஆப் கியூ ஆர் கோட்

 

இந்நிலையில் இன்டர்நெட் வசதி செல்போனில் இணைக்காமல் கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் புதிய வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.இது குறித்து வாட்ஸ் அப் நிர்வாகம் கூறுகையில் ,எங்களது நிர்வாகம் universal windows platform செயலியை  new multi- platform சிஸ்டம் உடன் இணைந்து பணியாற்ற உள்ளோம்.இதன் மூலம் உங்கள் செல்போன் ஆப் செய்யப்பட்டு இருந்தால் வாட்ஸ் அப்பை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது. இந்த  வசதியை எப்போது அறிமுகம் செய்யும் என்பதை பற்றி எந்த தகவலும் கூறவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்