முத்தம் கொடுத்தால் என்ன தவறு? வனிதாவுக்கு ஆதரவு தரும் காஜல் பசுபதி!

Default Image

வனிதாவின் திருமணம் குறித்து எழுந்த சர்ச்சைக்கு பதிலளித்த காஜல் பசுபதி வனிதாவுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளது பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் ஒருபுறம் பரவி வந்தாலும் இந்தியா முழுவதும் தற்போது சில நாட்களாக அதிக அளவில் பேசப்படுவது வனிதாவின் நான்காவது திருமணம் தான். திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பால் என்பவர் ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் கொண்டவர், மேலும் அவர் விவாகரத்து பெறாதவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பீட்டரின் முதல் மனைவி தனக்கு தன்னுடைய கணவர் வேண்டும் என்று கேட்கும் நிலையில் பொதுமக்களும் அவரது முதல் மனைவிக்கு ஆதரவு தெரிவித்தும் வனிதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அது போல பிரபலங்களும் சரி, வனிதாவின் குடும்பத்தை சார்ந்தவர்களும் சரி அனைவருமே வனிதா எடுத்துள்ளது தவறான முடிவு என்பதையும் சுட்டிக்காட்டி வருகின்றனர். யாருமே வனிதாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கக்கூடிய இந்த சூழ்நிலையில் வனிதாவுக்கு ஆதரவாக தற்போது டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் முதல் மனைவி காஜல் பசுபதி அவர்கள் வனிதாவுக்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார். ஏற்கனவே முதலில் பேசிய பொழுது திருமணம் செய்து கொள்வது என்பது அவரது தனிப்பட்ட முடிவு, இன்னொருவரின் கணவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றால் ஏற்கனவே திருமணமான மனைவி ஏன் இத்தனை நாட்களாக கணவரிடம் பேசாமல் இருந்தார். உங்கள் சட்டத்தில் இது திருமணமாக செல்லாது என்றால் அவர்கள் லிவின் டுகெதஇல் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார்.

தற்போது அவர் பேசியதில் பொதுமக்கள் மத்தியிலும் வளர்ந்த குழந்தைகள் மத்தியிலும் இப்படி பப்ளிக்காக முத்தம் கொடுப்பது நியாயம் தானா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு முத்தம் கொடுப்பது என்ன தவறு இருக்கிறது. காதலிக்கும் போது கூட யாரோ ஒருவரின் மகளுக்குக் தான் முத்தம் கொடுக்கிறார்கள் திருமணம் பண்ணாமல் விட்டுவிட்டும் செல்கிறீர்கள், இவர் திருமணம் ஆன பிறகு தன் கணவருக்கு முத்தம் கொடுக்கிறார் இதில் என்ன இருக்கிறது என்று வனிதாவுக்கு மிகவும் ஆதரவாக காஜல் பசுபதி பேசி வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்