நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி : பி.சி.ஸ்ரீராம்
நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தளபதி விஜய் மாஸ்டர் படப்பிடிப்பில் ஈடுபட்டு இருந்தபோது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து விஜய்யை வருமானவரித்துறையினர் காரில் சென்னைக்கு அழைத்துச் சென்று அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டனர்.
மேலும் பிகில் பட தயாரிப்பாளர், ஏஜிஎஸ் நிறுவனம், பைனான்சியர் அன்புசெழியன் அவர்கள் வீடு, அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதனையடுத்து வெளிநாட்டில் இருந்து மதமாற்ற கும்பல் பெரும் தொகையை வாங்கி, அதை சினிமாவில் முதலீடு செய்திருக்கின்றனர்.
இதில் நடிகர் விஜய், விஜய் ஆண்டனி, பிரபுசாலமன் சந்திரசேகர், விஜய் சேதுபதி போன்ற சினிமாக்காரர்கள் பலரும் ஈடுபட்டு நிறைய சம்பாத்தியம் அடைகின்றனர். அதன் பின்னணியில் தான் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர் என்று இணையத்தில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதனை அடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சேதுபதி தனது இணையப்பக்கத்தில் ‘போங்கடா போய் வேற வேலைய பாருங்கடா, என பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான பி.ஸி. ஸ்ரீராம் கூறுகையில் நடிகர் விஜய் சேதுபதியின் கருத்தை வரவேற்கிறேன். நீங்கள் என்ன சொன்னீர்களோ அது சரியே விஜய்சேதுபதி என விஜய் சேதுபதியின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்து இணையத்தில் பதிவிட்டுள்ளார்.