பாலா இல்லாம தனியா என்ன பண்ண போறியோ? ஷிவானியை கலாய்க்கும் ஹவுஸ் மேட்ஸ்!
பாலா தனி அறையில் சுஜித்ராவுடன் பூட்டப்பட்டுள்ளதால் பாலா இல்லாமல் ஷிவானி தனியாக இருப்பார் என ஹவுஸ் மேட்ஸ் ஷிவானியை நக்கல் செய்கின்றனர்.
கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற மணிக்கூண்டு டாஸ்கில் பலரும் மிக ஆர்வமாக விளையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் முறையாக விளையாடாத குழுவிலிருந்து சுஜித்ரா மற்றும் பாலா ஆகிய இருவர் தேர்வு செய்யப்பட்டு கண்ணாடி அறையில் இன்று ஒரு நாள் முழுவதும் அடைக்கப் பட்டுள்ளனர். பாலாவுடன் தான் எப்பொழுதுமே ஷிவானி சுற்றி திரிவார் என்பது எல்லாருக்குமே தெரியும்.
எனவே இன்று பாலா உள்ளே சென்றுள்ளதால் அவனில்லாமல் தனியா என்ன செய்யப் போகிறாயோ என்று தெரியவில்லை என சம்யுக்தா நக்கலடிக்கிறார். ரம்யா, இன்று நீங்கள் எங்களுடன் அதிகமாக பேசுவீர்கள் என்று நினைக்கிறேன் என கூறுகிறார். வீட்டில் உள்ள அனைவரும் தன்னை நக்கல் அடிப்பதாக கூறுகிறார் ஷிவானி. இதோ அந்த வீடியோ,
View this post on Instagram